Wednesday, October 15, 2014

ஏமாத்து வேலை..

எம்புருஷனும் கச்சேரிக்கு போனாங்கற கதைதான் என் கதை. இன்டர்வியூ போறன்னு சொல்லிட்டு வீட்டல உட்காந்து ட்விட் போடுறன். வேலை இல்லன்னு புலம்பினால் மட்டும் பத்தாது அதற்க்கான எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பயிற்சி இருக்கிறது ஆனால் முயற்சி இல்லை.. என்னை நானே இப்படித் திட்டிக் கொண்டால் தான் உண்டு. மானக்கேடான விஷயம் நான் இப்படி ப்ளாக் எழுதுவது. வீட்லையும் கண்டுக்கவில்லை. பேங்க் எக்ஸாம் எழுதலாம்னு பாத்தாலும் ஒன்னும் என் நேரம் சரியாக அமையவில்லை. நான் என் குடும்பத்தையும் மற்ற நண்பர்களையும் ஏமாத்திக் கொண்டு இருக்கிறேன். ஏன் எனக்கு வாழ்க்கை என்றால் புரியவில்லை. எதனால் என்று ஆராய்ந்து பார்க்கும் போது என்மீதே தவறு என திட்டவட்டமாக தெரிகிறது.
தீர்வு:
விளையாட்டு தனத்தை விட்டு பொறுப்பாக விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment